Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''நூலகம், மீட்டிங் ஹால்..'' - போயஸ் தோட்ட வேதா இல்ல அமைப்பு மற்றும் சிறப்புகள்!

ஜெயலலிதா நினைவில்லத்தை முதல்வரும், துணை முதல்வரும் காலையில் திறந்து வைக்க இருக்கின்றனர். இந்நிலையில் அதன் அமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் இன்று காலை 10.30 மணிக்கு திறக்கப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். 

image

குறிப்பிட்ட காலகட்டங்களில் போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்திற்கு வராத ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லை என்று கூட சொல்லலாம். தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலான அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வந்து சென்ற ஒரு அதிகார மையமாக இருந்து போயஸ் கார்டன். வேதா நிலையத்தின் மொத்த பரப்பளவு 10 கிரவுண்ட், அதாவது 24 ஆயிரம் சதுர அடி. இது தரை தளத்துடன் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.

வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் நீண்ட ஹால், அதன் அருகே ஒரு சிறிய மீட்டிங் ஹால்.

அதற்கு பக்கத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் அமரும் அறை. மாடி ஏறும் இடத்தில் மற்றொரு மீட்டிங் ஹால். அதன் அருகே மீட்டிங் வருபவர்கள் அமர்வதற்காக ஒரு அறை. எல்லா இடங்களிலும் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் வைக்கப்பட்டிருக்கும். முதல் தளத்திற்கு படி ஏறியவுடன் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான நூலகம் இருக்கும். வாசிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் ஜெயலலிதா 8,376 புத்தகங்களுக்கு மேல் தனது நூலகத்தில் வைத்திருந்தார். அதன் மதிப்பு மட்டும் 40 லட்ச ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

image

நூலகத்துக்கு அருகே ஒரு சிறிய மீட்டிங் ஹால். அதைத்தாண்டி ஜெயலலிதாவின் அறை. அதற்கு அருகே சசிகலா தங்கியிருந்த அறை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முதல் தளத்தில் கட்சிப் பணிகள் நடைபெறும். அவரது நேர்முக உதவியாளர்களின் அலுவலகங்கள் அங்கு செயல்படும். இரண்டாம் தளத்தில் முதலமைச்சருக்கான அலுவலகம் செயல்பட்டு வந்தது. இப்படி பல்வேறு அம்சங்களை கொண்டு அதிகார மையமாக திகழ்ந்த வேதா இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2YjiShV

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்