இந்திய கேப்டன் விராட் கோலியை கட்டுப்படுத்துவது எங்களுக்கு சவாலான காரியமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் விளையாடுவதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளது இங்கிலாந்து அணி.
“இந்திய அணிக்குள் விராட் கோலி காம்பேக் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் இப்போது எங்களுடன் விளையாட உள்ளார். இந்தியாவை திறம்பட வழிநடத்தவும், தனது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவும் அவர் பசியோடு இருக்கிறார். அது எங்களுக்கு இந்த தொடரில் சவாலான காரியமாக இருக்கும்.
இந்திய அணி தனது பலத்தை ஆஸ்திரேலிய தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. கோலி இல்லாதபோதும், வீரர்கள் காயம்பட்ட போதும் விடாமுயற்சியோடு வெற்றி பெற்ற அணி இந்தியா” என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி வரும் 5 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39z2511இந்திய கேப்டன் விராட் கோலியை கட்டுப்படுத்துவது எங்களுக்கு சவாலான காரியமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் விளையாடுவதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளது இங்கிலாந்து அணி.
“இந்திய அணிக்குள் விராட் கோலி காம்பேக் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் இப்போது எங்களுடன் விளையாட உள்ளார். இந்தியாவை திறம்பட வழிநடத்தவும், தனது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவும் அவர் பசியோடு இருக்கிறார். அது எங்களுக்கு இந்த தொடரில் சவாலான காரியமாக இருக்கும்.
இந்திய அணி தனது பலத்தை ஆஸ்திரேலிய தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. கோலி இல்லாதபோதும், வீரர்கள் காயம்பட்ட போதும் விடாமுயற்சியோடு வெற்றி பெற்ற அணி இந்தியா” என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி வரும் 5 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்