இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் அந்த அணிக்கு எதிராக எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
கடந்த முறை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதேபோல கடந்த முறை இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. இம்முறை இந்தியா - இங்கிலாந்து என இரு அணிகளுமே சம பலத்தில் இருப்பதால் இந்தத் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர்
இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் அந்த அணிக்கு எதிராக 2535 ரன்களை எடுத்துள்ளார். அதில் 7 சதங்கள் 13 அரை சதங்கள் அடங்கும். அவருடைய சராசரி 51.73. ஆனால் அதிசயமாக "கிரிக்கெட்டின் மெக்கா" என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் சதம் விளாசியதில்லை. அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான எந்தப் போட்டியிலும் அவர் டக் அவுட் ஆனதில்லை.
சுனில் கவாஸ்கர்
சச்சினுக்கு அடுத்தப்படியாக சுனில் கவாஸ்கர் இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2483 ரன்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை அவர் 1971 முதல் 1986 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில் 4 சதங்களும் 16 அரை சதங்களும் அடங்கும். 1971 இல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்தியா, அந்த அணியில் இடம்பெற்றவர் சுனில் கவாஸ்கர்.
ராகுல் டிராவிட்
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன் ராகுல் டிராவிட் அந்த அணிக்கு எதிராக 21 போட்டிகளில் விளையாடி 1950 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய சராசரி 60.93. மிக முக்கியமாக 1996 இல் தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் எடுத்தார். மொத்தம் இங்கிலாந்துக்கு எதிராக 7 சதம், 8 அரை சதம் விளாசியுள்ளார் ராகுல் டிராவிட். 2011 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மட்டும் 461 ரன்களுடன் 3 சதங்கள் அடித்தார் ராகுல் டிராவிட்.
குண்டப்பா விஸ்வநாத்
1971 முதல் 1982 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளையாடிய விஸ்வநாத், இங்கிலாந்துக்கு எதிராக 30 டெஸ்ட் போட்டிகளில் 1880 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி 37.60. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அணியில் இடம்பெற்ற விஸ்வநாத், 1971 டெஸ்ட் தொடரில் மட்டும் 128 ரன்களை எடுத்து அசத்தினார்.
திலீப் வெங்சர்க்கார்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான வெங்சர்க்கார் இங்கிலாந்துக்கு எதிராக 1589 ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 6 அரை சதங்களும் அடங்கும். இதில் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 4 இன்னிங்ஸில் 3 சதங்களை எடுத்துள்ள வெங்சர்க்கார், அந்த மைதானத்தில் மட்டும் 508 ரன்களை எடுத்துள்ளார். இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2MEsIbAஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில் அந்த அணிக்கு எதிராக எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்