Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்

https://ift.tt/3a8Veug

இந்திய வீரர்கள் மீது இனவெறி கருத்துகளால் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது. டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாளில் மட்டுமல்லாமல் 4 வது நாளிலும் சில ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசினர். இது தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தார்.

image

இனவெறி புகாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான கண்டனங்களை ஏற்கெனவே பதிவு செய்தது. அதில், ''இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி. இனவெறியை ஆதரிப்பவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. இந்திய கிரிக்கெட் அணி நண்பர்களிடம் நாங்கள் வருத்தங்களை பதிவு செய்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்'' என தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு தலைவர் ஷான் கேரல் " இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனவெறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டது உண்பை என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புக்கொள்கிறது. மைதானத்தில் இருக்கும் சிசிடிவி காட்சகள், டிக்கெட் தரவுகள், பார்வையாளர்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை பார்த்து இனவெறி கருத்துகள் கூறியவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் போலீஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்துகள் ஆட்டத்தின் மூன்றாம் நாளின் 86 ஆவது ஓவரில் நடந்தது. இந்த் சம்பவம் ப்ரேவோங்கல் காலரியில் நடந்தது. ஆஸ்திரேலிய போலீஸ் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். முழுமையான விசாரணை முடிவடைந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் ஷான் கேரல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்