நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
- குறிப்பிட்ட நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலவரம் என்ன என்பதை விரிவான அலசலுடன் கூறும் அறிக்கையே Ecomnomic Survey எனப்படும். குறிப்பிட்ட ஆண்டில் நெல், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்ததா? அதிகரிக்காவிட்டால் என்ன காரணம் என்பது உள்ளிட்ட தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
- அரசின் பல்வேறு துறைகளும் சாதித்தது என்ன, கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்புகளின்படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவா, நிறைவேறாவிட்டால் அதற்கு காரணம் என்ன என்பது உள்ளிட்ட அலசல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
- தொழிற்துறைகளின் உற்பத்தி எவ்வளவு, உற்பத்தி அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணங்கள் என்ன என்ற தகவலும் ஆய்வறிக்கையில் இடம்பெறும்.
- எந்தெந்த துறைகளில் எவ்வளவு வளர்ச்சி ஏற்படும் என்று ஆய்வறிக்கையில் கூறும் தகவலின்படிதான் அவற்றுக்கு அடுத்தாண்டுக்கான நிதி ஒதுக்கீடின் அளவும் தீர்மானிக்கப்படும்.
- இதேபோல அரசின் வரி உட்பட பல்வேறு வழிகளில் ஈட்டிய வருவாய் பற்றிய தகவலையும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடும். இதன் அடிப்படையில்தான் பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டுக்கான அரசின் வரவு செலவும் முடிவு செய்யப்படும்.
- கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் நாடு எதிர்கொண்ட பாதிப்புகளின் முழுமையான அலசலாக இந்தாண்டுக்கான ஆய்வறிக்கை அமையும் என கூறப்படுகிறது.
- நாடெங்கும் பெரும் அதிர்வுகளை புதிய வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்ற விரிவான தகவல்களும் ஆய்வறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாட்டின் பொருளாதார நிலவரத்தை படம் பிடித்துக் காட்டும் ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இந்த குழு தந்த தகவல்களின் அடிப்படையில்தான் நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் அமைய உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்