Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சாமி தரிசனம்!

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் திருவிழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது

தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத்திருவிழாவானது இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்தத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளிலும், முருகன் கோயில்களிலும் தைப்பூசம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு ஒரு நாளைக்கு 25000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய தைப்பூச திருவிழாற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

image

இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோவிலிலும் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில் சீரமைப்பு காரணமாக பால்குடம், காவடி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெற்கு கோபுரம் வழியாக 2 வரிசைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

image

திருப்பரங்குண்றத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. ரோந்துபணியில் 50க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

image

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் ஏராளமான பகுதியிலிருந்து மக்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

image

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்வான தைப்பூச விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. 10 நிமிடங்கள் நீடித்த இந்நிகழ்வில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

image

இதன் தொடர்ச்சியாக, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. நாளை காலை 5.30 மணி ஆக 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவிருக்கின்றது. நாளை மறுதினம், அதாவது சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் வள்ளலால் சித்திப் பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39rsUnP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்