Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இன்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக 4 பேரின் உடல்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் எடுத்து வரப்படுகின்றன.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 4 பேரில் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கின. இலங்கையின் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன் துறை கடற்படை முகாமில் நேற்றிரவு கொண்டு வரப்பட்டன.

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், 4 பேரில் உடல்களை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் இன்று காலை 10 மணிக்கு ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் எடுத்துக்கொண்டு காங்கேசன் துறைமுகத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு கப்பல் புறப்பட்டது.

நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை அரசையும் மத்திய அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3qPoxsx

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்