கோவையில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் அமர மறுத்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் தொகுதியில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 5 ஆண்கள்,5 பெண்கள் என மொத்தம் 10 பேருக்கு கேள்வி கேட்க அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொருவராக கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென எழுந்த பெண் ஒருவர் ஸ்டாலினை நோக்கி ’’இங்கு ஏன் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ’’இடையே கேள்வி கேட்க வேண்டாம்’’ என கூறி அந்தப் பெண்ணை அமருமாறு கூறினார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உங்களை அமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறாரா, நீங்கள் இந்தத்தொகுதிக்கு உட்பட்டவரா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
ஆனால் அந்தப் பெண் அமர மறுத்து தொடர்ந்து கேள்விக் கேட்டுக்கொண்டிருந்ததால், அந்தப் பெண்ணை வெளியேற்றுமாறு ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து திமுக மகளிரணி செயலாளர்கள் காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து பேசிய ஸ்டாலின், “கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் செய்ய அமைச்சர் வேலுமணி ஒரு பெண் மூலமாக கலவரத்தை தூண்டி விடுகிறார். மக்கள் கூட்டத்தில் திமுகவின் போர்வையில் அமர்ந்து பிரச்னையை உருவாக்குகிறார். இது போன்ற நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2X0sXzVகோவையில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் அமர மறுத்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் தொகுதியில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 5 ஆண்கள்,5 பெண்கள் என மொத்தம் 10 பேருக்கு கேள்வி கேட்க அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொருவராக கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென எழுந்த பெண் ஒருவர் ஸ்டாலினை நோக்கி ’’இங்கு ஏன் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ’’இடையே கேள்வி கேட்க வேண்டாம்’’ என கூறி அந்தப் பெண்ணை அமருமாறு கூறினார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உங்களை அமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறாரா, நீங்கள் இந்தத்தொகுதிக்கு உட்பட்டவரா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
ஆனால் அந்தப் பெண் அமர மறுத்து தொடர்ந்து கேள்விக் கேட்டுக்கொண்டிருந்ததால், அந்தப் பெண்ணை வெளியேற்றுமாறு ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து திமுக மகளிரணி செயலாளர்கள் காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து பேசிய ஸ்டாலின், “கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் செய்ய அமைச்சர் வேலுமணி ஒரு பெண் மூலமாக கலவரத்தை தூண்டி விடுகிறார். மக்கள் கூட்டத்தில் திமுகவின் போர்வையில் அமர்ந்து பிரச்னையை உருவாக்குகிறார். இது போன்ற நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்