Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; அச்சம் கொள்ளத்தேவையில்லை'' - டிடிவி தினகரன்

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் தேவையா என மருத்துவர்களே முடிவு செய்வர். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

image

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ஆம் தேதி விடுதலையாகிறார். ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3qCP8IZ

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்