Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“எனக்கும் எனது குடும்பத்திற்கும் தீப் சித்துவுடன் தொடர்பில்லை” - பாஜக எம்.பி. சன்னி தியோல்

தனக்கும் தனது குடும்பத்திற்கும் தீப் சித்துவுடன் எந்த தொடர்பும் இல்லை என பாஜக எம்.பி சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றியவர் தீப் சித்து. பின்னர் விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே அதில் தன்னை இணைத்துக்கொள்ள முயற்சித்து வந்தார். ஆனால் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அவரை புறக்கணித்து வந்தனர். டெல்லியில் காவல்துறையினர் அனுமதியளித்த பகுதியில் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் தீப் சிங் டெல்லிக்கு உள்ளே பேரணி நடைபெறும் என அறிவித்ததாகத் தெரிகிறது.

image

இதன் தொடர்ச்சியாகவே சில விவசாய சங்கங்களுடன் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணியை தொடங்கியதுடன், தனது அடியாட்களை வைத்து மத்திய டெல்லி பகுதியில் காவல்துறை அனுமதியளித்த பாதையை விடுத்து, செங்கோட்டையை நோக்கி விவசாயிகளை வழிநடத்தியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்ற இவர்தான காரணமாக இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசிய கொடியை இறக்கவில்லை என்றும் தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் சன்னி தியோல் தனது ட்விட்டர் பக்கத்தில், “செங்கோட்டையில் நடந்தது குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் தீப் சித்துவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று டிசம்பர் 6 ம் தேதி ட்விட்டரில் தெளிவுபடுத்தியிருந்தேன். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3pipDMW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்