பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமானது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்ததை அடுத்து, ஆர்டிபிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

எனவே இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் லதா, புதிய தலைமுறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். கொரோனா உறுதியாகியுள்ள சசிகலாவுடன் சிறையில் இருந்ததால் இளவரசிக்கும் பரிசோதனை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2LM73ys

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்