தமிழகத்தில் ஜனவரி 12ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது, “இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தேதி வாரியாக மழை பெய்யும் இடங்கள்:
05.01.2021: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்,
பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான
மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
06.01.2021, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது
முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
07.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.01.2021: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்