Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!

ரஷ்யாவில் அரசை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை விடுவிக்க கோரி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், கைகலப்பு ஏற்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் நாவல்னி. உணவில் விஷம் வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்ட நாவல்னி அண்மையில் ரஷ்யா திரும்பினார். பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னி, முறையான விசாரணைக்கு ஆஜராக நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

image

கைது செய்யப்பட்ட நாவல்னியை விடுவிக்கக் கோரி நேற்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39cUN2U

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்