”திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்த்ல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆளுங் கட்சியான அதிமுக பாஜகவுடனும், திமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி கட்டணம் வரை இலவச கல்வி என அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்காக, புதுச்சேரி முதல்வரை சந்தித்து திருமாவளவன் பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார்
முன்னதாக மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்த மதிமுக கட்சித் தலைவர் வைகோ, “ சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னதில்தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்