திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கம் பகுதியில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் மேற்கொண்டு வரும் பரப்புரையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கை ஒரு பக்கம் தயாரிக்கப்பட்டு வந்தாலும் கூட, திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யும் என்பதை அவர் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tb6crDதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கம் பகுதியில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் மேற்கொண்டு வரும் பரப்புரையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கை ஒரு பக்கம் தயாரிக்கப்பட்டு வந்தாலும் கூட, திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யும் என்பதை அவர் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்