''தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை ஒன்றுசேர்ந்து தடுத்து பாதுகாப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். 'ராகுலின் தமிழ் வணக்கம்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சுற்றுப்பயணத்தின்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொங்கு பெல்ட்டில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை ஒன்றுசேர்ந்து தடுத்து பாதுகாப்போம்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பிரசாரம் தொடர்பான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பிரசார தலைப்புடன் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ''நம்ம ராகுலுடன் ஒன்னா கை கோர்ப்போம். வாங்க, ஒரு கை பார்ப்போம்'' என்ற வாசகங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
I am delighted to be back in Tamil Nadu today to spend time with my Tamilian brothers and sisters in the Kongu belt.
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2021
Together, we will defend & preserve the unique culture of the Tamils against the attacks by Modi govt. pic.twitter.com/LEl0Uxglbd
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sQEVun

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்