Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!

https://ift.tt/38Rfh0I

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ளன. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்காக பேட்டிங் கூட்டணி அமைத்த வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாக்கூரும் பவுலிங்கிலும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன் மூலம் 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த வார்னர் மற்றும் மார்க்கஸ் ஹாரிஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

82 பந்துகளில்  38 ரன்களை குவித்த ஹாரிஸுக்கு தாக்கூர் வீசிய 25-வது ஓவரின் பந்து அவரது கிளவுஸை உராசியபடி சென்றது. அதை கீப்பர் பண்ட் கேட்ச் செய்தார். தொடர்ந்து அதற்கடுத்த ஓவரில் வார்னரும் 48 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் LBW முறையில் அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய லபுஷேனும், மேத்யூ வேடும் சிராஜ் வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்