Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோரிடம் இன்றைக்குள் கருத்துக்கேட்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்றைக்குள் கருத்துக்கேட்கவும், அவர்கள் தெரிவித்த கருத்தை 8ஆம் தேதி காலை 10 மணிக்குள் அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‌‌

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது கல்வியாண்டே நிறைவு பெற இருப்பதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காக விரைவில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் பள்ளிகள் கருத்து கேட்டுவருகின்றன.

image

நாளொன்றுக்கு 100 பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் அழைப்பு விடுத்துள்ளன. பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைப்பர். பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்க வேண்டுமென்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் நாளைக்குள் கருத்துக்கேட்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 8ஆம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாகவே கருத்துகளை பெற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் பெறப்பட்ட அறிக்கையை தொகுத்து 8ஆம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3bcELaB

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்