9 மாதங்களுக்கு பிறகு, புதுச்சேரியில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தநிலையில், இன்று முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், தங்களின் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 18ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, 9,10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3 மாதமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rLEa5D9 மாதங்களுக்கு பிறகு, புதுச்சேரியில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தநிலையில், இன்று முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், தங்களின் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 18ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, 9,10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3 மாதமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்