ஜனவரி 8 ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தேசிய மருந்து கிடங்கில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8 ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயார்.
ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதன்மை சேமிப்பு கிடங்கில் இருந்து தடையின்றி தடுப்பு மருந்து மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படும். 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38ikUVtஜனவரி 8 ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தேசிய மருந்து கிடங்கில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8 ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயார்.
ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதன்மை சேமிப்பு கிடங்கில் இருந்து தடையின்றி தடுப்பு மருந்து மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படும். 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்