தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.
மனிதனுக்கு நெருக்கமான காட்டு விலங்கு ஒன்று இருக்கமென்றால் அது யானைதான். ஆதிகாலத்தில் இருந்தே சமவெளிகளில் யானையுடன் மனிதனே இணைந்தே வாழ்ந்து வந்துள்ளான் என்பதற்கு இலக்கியங்கள் உதாரணமாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. அதுவும் தென்னகத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல கோயில்களில் யானைகள் உள்ளன. அதுவும் கேரளாவில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் கலந்தது யானைகள்.
அப்படிப்பட்ட யானைகளை கொண்டாடும் நிலத்தில்தான் சோகங்களும் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட கேள்வியில் இந்தச் செய்தி அம்பலமாகி இருக்கிறது.
சென்னையைச் சார்ந்த வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் என்பவர் தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக சென்னை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2015ம் ஆண்டில் தமிழகத்தில் 61 யானைகள் உயிரிழந்துள்ளன. 2016 ஆம் ஆண்டு 98 யானைகளும், 2017 ஆம் ஆண்டு 125 யானைகளும், 2018 ஆம் ஆண்டு 84 யானைகளும், 2019 ஆம் ஆண்டு 108 யானைகளும் மற்றும் 2020 ஆம் ஆண்டு செடம்பர் வரை 85 யானைகள் உயிரிழந்துள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 561 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும் தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனத்துறை குறிப்பிட்டுள்ளது.
6 ஆண்டுகளில் இறந்தவற்றில் 161 யானைக்குட்டிகளும் அடக்கம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 7 யானைகள், சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன.
யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, வலசைப்பாதைகள் ஆக்கிரமிப்பு, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசுபடுதல், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. யானைகளின் அழிவென்பது வனத்தை அழிக்கும் முயற்சி என்பதால் யானைகளை காக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39oYuCvதமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்