Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிறந்தது 2021! - தமிழகம் முழுக்க புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

https://ift.tt/383LZvz

உலகம் முழுக்க 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.

புது நம்பிக்கை ஊட்டும் விதமாக 2021 பிறந்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் வீடுகளில் மக்கள் புதிய ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

புத்தாண்டயொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்து. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி பனிமயமாதா உள்ளட்ட தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமனோர் கலந்துகொண்டார்.

image

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று மக்கள் வழக்கமாக கூடும் இடங்களில் கொண்டாட்டங்களுக்கு இந்தாண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் சென்னை மெரினா கடற்கரை வெற்றிச்சோடி காணப்பட்டது. மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பெசன்ட்நகர் கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டன. சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, பைக் ரேஸ் நடக்காத வண்ணம் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். சென்னையில் புத்தாண்டையொட்டி தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பட்டன.

கோவையில் குடியிருப்பு வாசிகள் இணைந்து புத்தாண்டு பிறந்ததை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அப்பகுதி மக்கள் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாடினர்.

மதுரையில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட குடும்ப குடும்பமாய் மக்கள் ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

வழக்கமாக கொண்டாட்டம் இல்லாதப்போதும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலேயே புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். கொரோனா காலம் 2020துடன் முடிந்து புது வெளிச்சம் 2021இல் மலர வேண்டும் என வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்