100 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்களை எடுத்து கொடூர டெஸ்ட் போட்டி ஆடி வருகிறார் இந்திய வீரர் விஹாரி.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின் வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இந்திய அணி தற்போது 306 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. ரிஷப் பண்ட் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.தற்போது அஸ்வினும், விஹாரியும் களத்தில் உள்ளனர்.

இருவருமே டெஸ்ட் போட்டிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விஹாரி கொடூர டெஸ்ட் போட்டியை ஆடி வருகிறார். கிட்டத்தட்ட 100 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 6 ரன்களை எடுத்திருந்தார். தன்னுடைய பேட்டிங்கால் ஆஸி பந்துவீச்சாளர்களை சோதித்து வருகிறார் விஹாரி. தற்போதைய நிலவரப்படி விஹாரி 123பந்துகளில் 7 ரன்களும், அஸ்வின் 92 பந்துகளுக்கு 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். பொறுமையின் உச்சகட்டமாக விளையாடும் விஹாரி தற்போது சோஷியல் மீடியா ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். பலரும் விஹாரி குறித்தும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். விக்கெட்டுகளை விடாமல் விஹாரி சரியான ஆட்டம் ஆடுகிறார் என சிலர் பாராட்டுகளை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில் விஹாரி நிதானமாக சீரான ரன்களை எடுத்து விளையாடினால் வெற்றி பெறக்கூட வாய்ப்புண்டு எனவும், விஹாரி வெற்றியை விலகச் செய்துவிட்டார் எனவும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்