ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தேசிய தலைவராக, ஆர்.சி.பி சிங் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராம் சந்திர பிரசாத் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த தலைவர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு - பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்ற, நிதிஷ் மீண்டும் முதல்வரானார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்து வரும் நிதிஷ், கட்சித் தலைவா் பொறுப்புக்கு வேறு நபரை நியமிக்க முடிவெடுத்து. தற்போது ஆா்.சி.பி. சிங்கை தேர்ந்தெடுத்துள்ளார்.
நிதிஷ் குமாருக்கும், ஆா்.சி.பி. சிங்குக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே நாலந்தாவை பூர்விகமாக கொண்டவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதிஷ் ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான் இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மறைந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் பெனி பிரசாத் வர்மா, ஆர்.சி.பி சிங்கை நிதிஷுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரே பின்னாளில் ஆர்.சி.பி சிங்கை தனிச் செயலாளராக நியமித்து கொள்ளுமாறு நிதிஷுக்கு வலியுறுத்தவும் செய்தார். காரணம், இந்த மூவருக்கும் இணைக்கும் பொதுவான இணைப்பு, அவர்களின் சமூகம். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மூவரும்.
பல ஆண்டுகளாக ஆர்.சி.பி சிங்கின் வளர்ச்சியில் சாதி ஒரு பங்கைக் கொண்டுள்ளது, குறிப்பாக, ஓர் அரசியல்வாதியாக சமூகப் பின்புலத்தால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்துள்ளார் என்கிறார்கள் பீகார் உள்விவரம் அறிந்தவர்கள். இப்போது, ஜே.டி.யு-வில் நம்பர் டூ தலைவராக இருப்பதால், கட்சியை வழிநடத்தவும் ஒழுங்கமைக்கவும் ஆர்.சி.பி சிங்கை நம்பி நிதிஷ் பணிகளை ஒப்படைத்துள்ளார்.
அரசியலுக்கு முன் ஜே.என்.யு-வில் படித்தவர் இளம் வயதிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற, உத்தரப் பிரதேச கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.சி.பி சிங். இளம் வயதிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்றவர் என்பதால் அப்போதே அவர் பிரபலம். ஆர்.சி.பி தனது அரசியல் தலைவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் எப்போதும் கில்லாடி. அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்து பதவிகள் வந்தது என்கிறார் அவரின் ஜே.என்.யூ சகா ஒருவர்.
பின்னர் மத்திய அரசுப் பணியில் இருந்தபோது நிதிஷ்குமாரின் செயலாளராக பணிபுரியும் வாய்ப்பு ஆர்.சி.பி-க்கு கிடைத்தது. அந்த சமயத்தில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள அரசு ஆட்சியில் இருந்த நிலையில், அம்மாநிலத்தில் ரயில்வே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நிதிஷின் நம்பிக்கையை பெற்றார். இதனால், 2005 ஆம் ஆண்டில் நிதிஷ் முதல்வரானபோது, ஆர்.சி.பி.-யை தன்னுடன் அழைத்து வந்து முதன்மை செயலாளராக நியமித்தார். இந்த காலகட்டங்களில் இருவரின் நட்பு இன்னும் அதிகமாக, 2010-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு ஜே.டி.யு-வில் ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பின்னர் 2016-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஜேடியு கட்சியில் தேசிய துணைத் தலைவரானபோது, ஆர்.சி.பி-யின் அரசியல் வாழ்வில் ஒரு சுணக்கத்தை கொடுத்தது. பிரஷாந்துக்கும் அவருக்கும் பல விஷயங்களில் உடன்படவில்லை. குறிப்பாக, பிரசார உத்தி, பாஜகவிடம் கோரப்பட வேண்டிய இடங்கள் போன்றவற்றில் இருவருக்கும் முட்டல் ஏற்பட்டது. எவ்வாறாயினும், 2019 மக்களவைத் தேர்தலின் நடுப்பகுதியில், கிஷோர் கட்சியை விட்டு வெளியேறியதால் மீண்டும் கட்சிக்குள் பலம் பொருந்திய ஆளாகவும், நிதிஷுக்கு நெருக்கமாகவும் ஆனார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஆர்.சி.பி சிங், பிஜேபியுடன் கொஞ்சம் குளோஸ். 2010 முதல் டெல்லியில் தொடர்ந்து இருப்பதால் பாஜகவின் உயர் தலைமையுடன் தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்த ஆர்.சி.பி-க்கு உதவியது என்று ஜே.டி.யு தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், பின்னர் பாஜக வழங்கிய பிரதிநிதித்துவத்தை ஜே.டி.யு நிராகரித்ததால் பதவி வந்த கையேடு திருப்பிப் போனது.
நிதிஷ்குமாருக்கு இப்போது ஏன் ஆர்.சி.பி தேவை?
2014 மக்களவைத் தேர்தலில் ஒரு மோசமான நிகழ்ச்சிக்குப் பிறகு, நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகி ஜிதான் ராம் மஞ்சியை முதல்வராக மாற்றினார். ஆனால், மஞ்சி பின்னர் கிளர்ச்சி செய்து தனக்கென்ன சொந்தக் கட்சியை உருவாக்கியதால் தனது முடிவை நினைத்து வருத்தப்பட்டார் நிதிஷ். இப்போது, அவர் ஆர்.சி.பியை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார், ஏனெனில் ஆர்.சி.பி மீது அளப்பரிய நம்பிக்கைகளை வைத்துள்ளார் நிதிஷ்.
நிதிஷ் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை பாஜக உயர் தலைமையுடன் மத்தியஸ்தம் செய்யக்கூடிய எந்தவொரு தலைவரும் இல்லாததுதான். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உயிருடன் இருந்தபோது, நிதிஷ் பிரச்னைகளை அவர் மூலமாக பேசி தீர்த்து வந்தார். அதேபோல் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி இருந்தார். அவர் மத்திய அரசாங்கத்துடனான பிரச்னைகள் மற்றும் கூட்டணி தொடர்பான சச்சரவுகளை சுமூகமாக கொண்டு சென்றார். இதனால் நிதிஷுக்கு பிரச்னை இல்லாமல் இருந்தது.
இப்போது அருண் ஜெட்லி உயிருடன் இல்லை. சுஷில் குமார் மோடி பதவியிலும் இல்லை. இதனால் இதன் விளைவாக, பீகாரில் தற்போது பாஜக முகங்களாக பூபேந்தர் யாதவ் போன்ற தலைவர்கள் உருவாகி வருகின்றனர். அவர்களிடம் நிதிஷுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. இதனால் தனது அமைச்சரவையை கூட விரிவாக்க முடியாமல் தவித்து வருகிறார். இதைக் கருத்தில் கொண்டு, பாஜக மத்திய தலைமையுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கும் ஆர்சிபியை தேர்வு செய்தால், தனது பிரச்னைகளுக்கும், கட்சிக்கும் ஒரு நல்ல நம்பிக்கையாகவும் இருக்கும் அவரை தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள் நிதிஷுக்கு நெருக்கமானவர்கள்.
- மலையரசு
தகவல் உறுதுணை: தி பிரின்ட்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3aUsM10ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தேசிய தலைவராக, ஆர்.சி.பி சிங் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராம் சந்திர பிரசாத் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த தலைவர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு - பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்ற, நிதிஷ் மீண்டும் முதல்வரானார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்து வரும் நிதிஷ், கட்சித் தலைவா் பொறுப்புக்கு வேறு நபரை நியமிக்க முடிவெடுத்து. தற்போது ஆா்.சி.பி. சிங்கை தேர்ந்தெடுத்துள்ளார்.
நிதிஷ் குமாருக்கும், ஆா்.சி.பி. சிங்குக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே நாலந்தாவை பூர்விகமாக கொண்டவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதிஷ் ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான் இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மறைந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் பெனி பிரசாத் வர்மா, ஆர்.சி.பி சிங்கை நிதிஷுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரே பின்னாளில் ஆர்.சி.பி சிங்கை தனிச் செயலாளராக நியமித்து கொள்ளுமாறு நிதிஷுக்கு வலியுறுத்தவும் செய்தார். காரணம், இந்த மூவருக்கும் இணைக்கும் பொதுவான இணைப்பு, அவர்களின் சமூகம். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மூவரும்.
பல ஆண்டுகளாக ஆர்.சி.பி சிங்கின் வளர்ச்சியில் சாதி ஒரு பங்கைக் கொண்டுள்ளது, குறிப்பாக, ஓர் அரசியல்வாதியாக சமூகப் பின்புலத்தால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்துள்ளார் என்கிறார்கள் பீகார் உள்விவரம் அறிந்தவர்கள். இப்போது, ஜே.டி.யு-வில் நம்பர் டூ தலைவராக இருப்பதால், கட்சியை வழிநடத்தவும் ஒழுங்கமைக்கவும் ஆர்.சி.பி சிங்கை நம்பி நிதிஷ் பணிகளை ஒப்படைத்துள்ளார்.
அரசியலுக்கு முன் ஜே.என்.யு-வில் படித்தவர் இளம் வயதிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற, உத்தரப் பிரதேச கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.சி.பி சிங். இளம் வயதிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்றவர் என்பதால் அப்போதே அவர் பிரபலம். ஆர்.சி.பி தனது அரசியல் தலைவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் எப்போதும் கில்லாடி. அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்து பதவிகள் வந்தது என்கிறார் அவரின் ஜே.என்.யூ சகா ஒருவர்.
பின்னர் மத்திய அரசுப் பணியில் இருந்தபோது நிதிஷ்குமாரின் செயலாளராக பணிபுரியும் வாய்ப்பு ஆர்.சி.பி-க்கு கிடைத்தது. அந்த சமயத்தில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள அரசு ஆட்சியில் இருந்த நிலையில், அம்மாநிலத்தில் ரயில்வே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நிதிஷின் நம்பிக்கையை பெற்றார். இதனால், 2005 ஆம் ஆண்டில் நிதிஷ் முதல்வரானபோது, ஆர்.சி.பி.-யை தன்னுடன் அழைத்து வந்து முதன்மை செயலாளராக நியமித்தார். இந்த காலகட்டங்களில் இருவரின் நட்பு இன்னும் அதிகமாக, 2010-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு ஜே.டி.யு-வில் ஒரு முழு அரசியல்வாதியாக தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பின்னர் 2016-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஜேடியு கட்சியில் தேசிய துணைத் தலைவரானபோது, ஆர்.சி.பி-யின் அரசியல் வாழ்வில் ஒரு சுணக்கத்தை கொடுத்தது. பிரஷாந்துக்கும் அவருக்கும் பல விஷயங்களில் உடன்படவில்லை. குறிப்பாக, பிரசார உத்தி, பாஜகவிடம் கோரப்பட வேண்டிய இடங்கள் போன்றவற்றில் இருவருக்கும் முட்டல் ஏற்பட்டது. எவ்வாறாயினும், 2019 மக்களவைத் தேர்தலின் நடுப்பகுதியில், கிஷோர் கட்சியை விட்டு வெளியேறியதால் மீண்டும் கட்சிக்குள் பலம் பொருந்திய ஆளாகவும், நிதிஷுக்கு நெருக்கமாகவும் ஆனார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஆர்.சி.பி சிங், பிஜேபியுடன் கொஞ்சம் குளோஸ். 2010 முதல் டெல்லியில் தொடர்ந்து இருப்பதால் பாஜகவின் உயர் தலைமையுடன் தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்த ஆர்.சி.பி-க்கு உதவியது என்று ஜே.டி.யு தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், பின்னர் பாஜக வழங்கிய பிரதிநிதித்துவத்தை ஜே.டி.யு நிராகரித்ததால் பதவி வந்த கையேடு திருப்பிப் போனது.
நிதிஷ்குமாருக்கு இப்போது ஏன் ஆர்.சி.பி தேவை?
2014 மக்களவைத் தேர்தலில் ஒரு மோசமான நிகழ்ச்சிக்குப் பிறகு, நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகி ஜிதான் ராம் மஞ்சியை முதல்வராக மாற்றினார். ஆனால், மஞ்சி பின்னர் கிளர்ச்சி செய்து தனக்கென்ன சொந்தக் கட்சியை உருவாக்கியதால் தனது முடிவை நினைத்து வருத்தப்பட்டார் நிதிஷ். இப்போது, அவர் ஆர்.சி.பியை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார், ஏனெனில் ஆர்.சி.பி மீது அளப்பரிய நம்பிக்கைகளை வைத்துள்ளார் நிதிஷ்.
நிதிஷ் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை பாஜக உயர் தலைமையுடன் மத்தியஸ்தம் செய்யக்கூடிய எந்தவொரு தலைவரும் இல்லாததுதான். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உயிருடன் இருந்தபோது, நிதிஷ் பிரச்னைகளை அவர் மூலமாக பேசி தீர்த்து வந்தார். அதேபோல் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி இருந்தார். அவர் மத்திய அரசாங்கத்துடனான பிரச்னைகள் மற்றும் கூட்டணி தொடர்பான சச்சரவுகளை சுமூகமாக கொண்டு சென்றார். இதனால் நிதிஷுக்கு பிரச்னை இல்லாமல் இருந்தது.
இப்போது அருண் ஜெட்லி உயிருடன் இல்லை. சுஷில் குமார் மோடி பதவியிலும் இல்லை. இதனால் இதன் விளைவாக, பீகாரில் தற்போது பாஜக முகங்களாக பூபேந்தர் யாதவ் போன்ற தலைவர்கள் உருவாகி வருகின்றனர். அவர்களிடம் நிதிஷுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. இதனால் தனது அமைச்சரவையை கூட விரிவாக்க முடியாமல் தவித்து வருகிறார். இதைக் கருத்தில் கொண்டு, பாஜக மத்திய தலைமையுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கும் ஆர்சிபியை தேர்வு செய்தால், தனது பிரச்னைகளுக்கும், கட்சிக்கும் ஒரு நல்ல நம்பிக்கையாகவும் இருக்கும் அவரை தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள் நிதிஷுக்கு நெருக்கமானவர்கள்.
- மலையரசு
தகவல் உறுதுணை: தி பிரின்ட்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்