"தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய் தாக்கும்போது சித்த மருத்துவத்தாலும், தமிழர் உணவாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை கூடியிருக்கிறது" என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அரசு கொரோனா சிறப்புக்குழுவைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமனிடம், தமிழக அரசு மாற்று மருந்தையும் சேர்த்து முடிவெடுத்தது பற்றி கூறுமாறு கேட்கப்பட்டது.
"உலகளவில் சீனாவைத் தவிர, இந்திய மருத்துவங்களில் சித்த மருத்துவத்தை பயன்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பாதிப்பு முதல்நிலையில் உள்ளவர்களை கோவிட் சென்டர்களில் தங்கவைத்து, அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி மாற்று மருந்துகளை முயற்சித்து பார்க்கும்படி தமிழக அரசு ஆணை வெளியிட்டு அதன்படி இரண்டு மருத்துவமும் எங்கெல்லாம் ஒருங்கிணைய முடியுமோ அங்கெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
மேலும் சர்க்கரை நோய் போன்ற நோயுள்ளவர்கள் இயற்கை உணவுகளின்மூலம் எப்படி தங்கள் நோயைக் கட்டுக்குள் வைப்பது என்பதை தற்போது கற்றுக்கொண்டனர். இந்தியா போன்ற சித்த, ஆயுர்வேதம் போன்ற பல மருத்துவங்கள் இருக்கிற நாடுகளில் மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்.
ஏனென்றால், இனிவரும் ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய நோய்க்கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய் தாக்கும்போது சித்த மருத்துவத்தாலும், தமிழர் உணவாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகளைப்போல நமது நாட்டில் இரண்டாம் அலை பரவாததற்கு நமது உணவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே தடுப்பூசி ஆய்வைத் தவிர மற்ற ஆய்வுகளும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mfaKZo"தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய் தாக்கும்போது சித்த மருத்துவத்தாலும், தமிழர் உணவாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை கூடியிருக்கிறது" என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அரசு கொரோனா சிறப்புக்குழுவைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமனிடம், தமிழக அரசு மாற்று மருந்தையும் சேர்த்து முடிவெடுத்தது பற்றி கூறுமாறு கேட்கப்பட்டது.
"உலகளவில் சீனாவைத் தவிர, இந்திய மருத்துவங்களில் சித்த மருத்துவத்தை பயன்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பாதிப்பு முதல்நிலையில் உள்ளவர்களை கோவிட் சென்டர்களில் தங்கவைத்து, அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி மாற்று மருந்துகளை முயற்சித்து பார்க்கும்படி தமிழக அரசு ஆணை வெளியிட்டு அதன்படி இரண்டு மருத்துவமும் எங்கெல்லாம் ஒருங்கிணைய முடியுமோ அங்கெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
மேலும் சர்க்கரை நோய் போன்ற நோயுள்ளவர்கள் இயற்கை உணவுகளின்மூலம் எப்படி தங்கள் நோயைக் கட்டுக்குள் வைப்பது என்பதை தற்போது கற்றுக்கொண்டனர். இந்தியா போன்ற சித்த, ஆயுர்வேதம் போன்ற பல மருத்துவங்கள் இருக்கிற நாடுகளில் மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்.
ஏனென்றால், இனிவரும் ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய நோய்க்கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய் தாக்கும்போது சித்த மருத்துவத்தாலும், தமிழர் உணவாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகளைப்போல நமது நாட்டில் இரண்டாம் அலை பரவாததற்கு நமது உணவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே தடுப்பூசி ஆய்வைத் தவிர மற்ற ஆய்வுகளும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்