புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியை கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ராமநாதபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...
டிசம்பர் 04 - 8.10 AM: சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைவால் நீர் திறப்பு 1000 கன அடியில் இருந்து 573 கன அடியாக குறைப்பு
சில தகவல்கள்:
- புரெவி புயல் ஆழ்ந்த காற்றலுத்த மண்டலமாக மாறியப்போதும், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
- புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
- புரெவி புயல் வலுவிழந்தபோதிலும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
- மழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
- புயல் முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை மூடப்படுகிறது. புரெவி புயல் வலுவிழந்தாலும் தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மதுரை விமான நிலையத்தில் நண்பகல் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடி விமான நிலையமும் இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ogiYSuபுரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்