மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார்
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கின்போது தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தளர்த்திவந்தபோது கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார்
மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடனான இந்த சந்திப்பின்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், அமைச்சர் வேலுமணி உடன் இருந்துள்ளனர். மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வரும் 13 ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/34ObgaUமாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார்
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கின்போது தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தளர்த்திவந்தபோது கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்றிரவு சந்தித்துள்ளார்
மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடனான இந்த சந்திப்பின்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், அமைச்சர் வேலுமணி உடன் இருந்துள்ளனர். மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வரும் 13 ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்