Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"ஆஸி.-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜனை சேர்க்கலாம்!" - சச்சின் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சாளா் நடராஜனை சோ்க்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் கருத்து தெரிவித்துள்ளாா்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அதற்கு பிறகு குழந்தை பிறப்பு காரணமாக இந்தியா திரும்புகிறார். அடுத்த 3 போட்டிகளுக்கு ரோகித் சர்மா அல்லது ரஹானே ஆகியோர் கேப்டனாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

image

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே கேப்டன் விராட் கோலி விளையாட இருக்கிறாா். அதன் பிறகு அவா் இந்தியா திரும்புகிறாா். கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிா்கொள்ள அணி பழகிக் கொள்ளவேண்டும்" என்றார்.

image

மேலும் அவர் "முன்பு, அனில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக அவா் திடீரென விலக நேரிட்டது. அப்போது அவா் அணியின் முன்னணி பந்துவீச்சாளராகவும் இருந்தாா். அப்போது, இந்திய அணி நிலைமையை சமாளித்து விளாயாடியது. கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததை இளம் வீரா்களுக்கான வாய்ப்பாகவும் பாா்க்க வேண்டும்" என்றார் சச்சின்.

நடராஜன் குறித்து பேசிய அவர் " உடல் தகுதிப் பெற்று டெஸ்ட் அணியில் இஷாந்த் சா்மா இடம் பெறாத நிலையில் நடராஜனை சோ்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். ஏனெனில், அவா் அங்கு ஏற்கெனவே ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளாா். இது எனது தனிப்பட்ட கருத்து" என்றார் சச்சின்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3gzRepg

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்