டிசம்பர் 14 முதல் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள டெல்லியில் போராடும் விவசாயிகள், அதானி - அம்பானியின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், அரசின் மீபத்திய யோசனைகளை நிராகரித்துள்ளனர். மூன்று புதிய சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி-அக்ரி நெடுஞ்சாலைகளை டிசம்பர் 12 முதல் தடுத்து நிறுத்தவும், விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
நாட்டின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைக்கு விவசாயிகள் வந்து 15 நாட்கள் கடந்துவிட்டன. இப்போது டிசம்பர் 14 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். டிசம்பர் 14 ம் தேதி முதல் பாரதிய ஜனதாவுக்கு வருவாய் வழங்கும் அதானி திட்டங்கள், மால்கள், டோல் பிளாசாக்கள் மற்றும் பிற திட்டங்களை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
ஜியோ தயாரிப்புகளை தேசிய அளவில் புறக்கணித்தல், டிசம்பர் 14 அன்று நாடு முழுவதும் பாஜக மாவட்ட தலைமையகத்தில் போராட்டங்கள் நடத்துதல், அதானி - அம்பானி திட்டங்கள், மால்கள் மற்றும் டோல் பிளாசாக்கள் ஆகியவை முன்பு போராட்டங்கள் நடத்துதல், டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து டிசம்பர் 14 ஆம் தேதி ‘டெல்லி சாலோ’ என்ற முழக்கத்தின் கீழ் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39WyDm1டிசம்பர் 14 முதல் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள டெல்லியில் போராடும் விவசாயிகள், அதானி - அம்பானியின் தயாரிப்புகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், அரசின் மீபத்திய யோசனைகளை நிராகரித்துள்ளனர். மூன்று புதிய சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி-அக்ரி நெடுஞ்சாலைகளை டிசம்பர் 12 முதல் தடுத்து நிறுத்தவும், விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
நாட்டின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைக்கு விவசாயிகள் வந்து 15 நாட்கள் கடந்துவிட்டன. இப்போது டிசம்பர் 14 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். டிசம்பர் 14 ம் தேதி முதல் பாரதிய ஜனதாவுக்கு வருவாய் வழங்கும் அதானி திட்டங்கள், மால்கள், டோல் பிளாசாக்கள் மற்றும் பிற திட்டங்களை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
ஜியோ தயாரிப்புகளை தேசிய அளவில் புறக்கணித்தல், டிசம்பர் 14 அன்று நாடு முழுவதும் பாஜக மாவட்ட தலைமையகத்தில் போராட்டங்கள் நடத்துதல், அதானி - அம்பானி திட்டங்கள், மால்கள் மற்றும் டோல் பிளாசாக்கள் ஆகியவை முன்பு போராட்டங்கள் நடத்துதல், டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து டிசம்பர் 14 ஆம் தேதி ‘டெல்லி சாலோ’ என்ற முழக்கத்தின் கீழ் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்