வேளாண் சட்டங்கள் குறித்த சமரசத் திட்டங்களை விவசாய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், உறுதியான கருத்துருவை முன்வைத்தால் பரிசீலிக்க தயார் என வேளாண் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டம் 16 ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு முன்வைத்த சமரசத் திட்டங்களையும் ஏற்கப் போவதில்லை என கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அரசு முன் வைத்த சமரசத் திட்டங்களை வேளாண் சங்கங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திறந்த மனதுடன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், எனவே, அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது உடனிருந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், விவசாயிகள் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தவிர, இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து விவசாயிகளை யாரேனும் தவறாக வழிநடத்துகிறார்களா என்பதை கண்டறிய, ஊடகங்கள் தங்களது புலனாய்வு திறனை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்திருக்கும் அதே வேளையில், தங்களுக்கும் பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் தான் என்றும், ஆனால், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான கருத்துருவை மத்திய அரசு முன்வைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் சம்யூக்த் கிசான் மோர்ச்சா சங்கத்தின் தலைவர்கள். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நாடு முழுவதும் ரயில் பாதைகளை மறிப்பதுடன், தலைநகர் டெல்லிக்கு செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் வேளாண் சங்கப் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் அதிகம் பேருக்கு சப்பாத்தி தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளும் குவிந்துள்ளனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nbrF0cவேளாண் சட்டங்கள் குறித்த சமரசத் திட்டங்களை விவசாய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், உறுதியான கருத்துருவை முன்வைத்தால் பரிசீலிக்க தயார் என வேளாண் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டம் 16 ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு முன்வைத்த சமரசத் திட்டங்களையும் ஏற்கப் போவதில்லை என கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அரசு முன் வைத்த சமரசத் திட்டங்களை வேளாண் சங்கங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திறந்த மனதுடன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், எனவே, அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை குறித்து விவசாயிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது உடனிருந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், விவசாயிகள் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தவிர, இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து விவசாயிகளை யாரேனும் தவறாக வழிநடத்துகிறார்களா என்பதை கண்டறிய, ஊடகங்கள் தங்களது புலனாய்வு திறனை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்திருக்கும் அதே வேளையில், தங்களுக்கும் பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் தான் என்றும், ஆனால், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான கருத்துருவை மத்திய அரசு முன்வைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் சம்யூக்த் கிசான் மோர்ச்சா சங்கத்தின் தலைவர்கள். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நாடு முழுவதும் ரயில் பாதைகளை மறிப்பதுடன், தலைநகர் டெல்லிக்கு செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் வேளாண் சங்கப் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் அதிகம் பேருக்கு சப்பாத்தி தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளும் குவிந்துள்ளனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்