Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'கடன் வட்டிவிகிதத்தை குறைக்க வங்கிப் படியேறுங்கள்!' - வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள்

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று சொல்லும் அளவுக்கு நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது இந்தத் பெருந்தொற்றுப் பேரிடர். கடனின்றி வாழ்க்கை அமையாது என்பதுபோல் ஆகிவிட்டது பலரது நிலைமை. தற்போதைய சூழலில் வங்கிக் கடன்களை எப்படி அணுகுவது என்பது குறித்த தெளிவை நாம் ஒவ்வொருவரும் பெறுவது அவசியம்.

image

இதுகுறித்து சில அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கிய Zebu Share and Wealth Managements (P) Ltd நிறுவனரும், நிதி ஆலோசகருமான V.விஜயகுமார், "கொரோனாவுக்குப் பின்னர் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுதல், வீட்டுக் கடன், தனிநபர் கடன் பெறுதல் போன்றவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று வரை வழக்கம்போல் கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன. ஆனால், தீவிர கொரோனா பரவல் இருந்த காலக்கட்டத்தில் மத்திய அரசு வழங்கிய சலுகைகள் சாமனியனுக்கு சிறுது இளைப்பாற நேரம் கொடுத்தாலும், அதனால் அதிக பயன் என்னவோ வங்கிகளுக்குதான்.

image

அதாவது, ஒருவர் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஊரடங்கின்போது தனது கடன் தொகையை திருப்பிச்செலுத்த அவருக்கு மத்திய அரசு கால அவகாசம் அளித்தது. முன்னதாக அந்தக் கால இடைவெளிக்கான வட்டித்தொகைக்கும், அசல் தொகைக்கும் சேர்த்து வட்டி வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர் அம்முறை அசலுக்கான வட்டித் தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்றானது. எப்படி பார்த்தாலும் வாடிக்கையாளரின் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் அதிகமாகியுள்ளது. அந்தக் கூடுதல் காலத்திற்கும் வாடிக்கையாளர்கள் வட்டித்தொகையை செலுத்துகின்றனர். இறுதியில் லாபம் வங்கிகளுக்குதான்.

வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு...

கொரோனா பேரிடரால் விழுந்த அடியானது அனைவருக்கும் பொதுவானது. இந்த அசாதாரணச் சூழ்நிலையால் முடக்கப்பட்டவர்களை நீங்கள் கவனித்தால், ஒன்று அவர் இந்தப் புதிய சூழ்நிலையை ஏற்க தயாராக இல்லாதவராகவோ அல்லது அந்தச் சூழ்நிலையை ஏற்ப தன்னை மாற்றி அமைத்துகொள்ளாதவராகவோ இருப்பார். ஆகவே, நிலைமை குறித்த சரியான புரிதல் இங்கு அவசியமானதாக இருக்கிறது. அந்தப் புரிதல் இருக்கும் பட்சத்தில் அவர் புதிய வாய்ப்புகளை தேட ஆரம்பித்திருப்பார்.

வங்கிகளில் கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் வட்டிவிகிதமானது பெருமளவு குறைந்துள்ளது. ஆகையால், வங்கிகளில் கடன் வாங்கியிருப்பவர்கள் வங்கிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு, தங்கள் கடனுக்கு இந்த வருடத்திற்கான வட்டிவிகித குறைப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றம் செய்து, வட்டித்தொகையைக் குறைக்க முடியும்.

image

என்னைப் பொருத்தவரை யாரோ ஒருவரிடம் கடன்பெற்று அதற்கான வட்டியை செலுத்திக் கொண்டிருப்பதைவிட, முறையான திட்டமிடலோடு சேமிப்பைத் தொடங்கி நமக்கான ஆசையை நிறைவேற்றிக்கொள்வதே சாலச் சிறந்தது. ஏனெனில், பெரும்பாலும் வாங்கிய கடனுக்கான வட்டித்தொகையை நீங்கள் செலுத்தி முடிக்கும் நேரத்தில், உங்களிடம் இருந்து பெருமளவுத் தொகையானது மற்றொருவரின் கைக்கு மாறியிருக்கும்.

ஆகையால், கொரோனா காலத்தில் வீழ்ந்த பொருளாதார இழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனி வரும் காலத்திலாவது சேமிப்பின் மூலம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பாணியை மக்கள் கைக்கொள்ள வேண்டும்" என்றார் விஜயகுமார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/33w2LAK

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்