கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவசங்கர் உள்பட இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கடத்தலில் அம்மாநில முன்னாள் தலைமைச் செயலளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் உள்பட இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் சிவசங்கரிடம் இருந்து மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pncx0Gகேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவசங்கர் உள்பட இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கடத்தலில் அம்மாநில முன்னாள் தலைமைச் செயலளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் உள்பட இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் சிவசங்கரிடம் இருந்து மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்