நெல்லை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க பாபநாசம், பாபநாசநாதர் சுவாமி கோயிலில் இருந்து திருடுபோன நகைகளை மீட்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாபநாசம். பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான பாபநாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. குழந்தைப்பேறு திருமணப்பேறு மற்றும் பல்வேறு பாவ நிவர்த்திக்கான பரிகாரங்களை இந்த கோயிலில் செய்யும்பொழுது பாவங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. அப்படி நாள்தோறும் பல பரிகார பூஜைகள் இங்கு நடைபெறும்.
இந்த பரிகார பூஜைகள் நடைபெறும்போது மக்கள் தங்கள் பாவங்கள் தீர தங்கம், வெள்ளி காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கோயில் செயல் அலுவலர் அறையில் இரும்பு பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். உண்டியலில் சேரும் பணம் மற்றும் பரிகாரமாக அடைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ பரிசோதிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கோயில் நகைகள் சரிபார்ப்பு, செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. அப்போது உண்டியலில் சேர்ந்த நகைகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கோயில் நகைகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. நகைகள் காணாமல்போனது குறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், காவல்துறையினர் எவ்வளவு நகை, அதன் மதிப்பு என்ன, நகை மாயமானதற்கு யார் காரணம் என விசாரணையை தொடங்கினர்.
அதன்படி கோயில் உதவி அலுவலராக பணியாற்றும் ஒருவரும், அர்ச்சகர் ஒருவரும் சேர்ந்து மக்கள் வழங்கிய 199.5 கிராம் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் திருடிய நகைகளை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு நாகர்கோவிலில் விசாரணை மேற்கொண்டனர்.
திருமாவளவன் மட்டும்தான் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறாரா? - உயர் நீதிமன்றம்
இதுபற்றி அவர் கூறும்போது,“ நகைகள் அனைத்தும் மீட்கப்படும். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். இந்த திருட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது”எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்