ஐக்கிய நாடுகள் சபையின் 'புதுப்பிப்பு பொத்தான்' அழுத்தப்பட வேண்டிய நேரமிது என்று, ஐ.நா.-வில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருப்பது ஐ.நா சபையில் நிரந்தர அந்தஸ்து பெறவேண்டும் என்பதே. ஆனால், இன்னும் அதற்கான காலம் கனியவில்லை. பல ஆண்டுகளாக ஐ.நா சபையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதில் முக்கியமான நாடு இந்தியா. சமீபத்தில் ஐ.நா பொதுச் சபையில் இந்தியா சார்பில் பேசிய பிரதமர் மோடி, "ஐ.நா சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர். இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இப்போது இதே கருத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கூறியிருக்கிறார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்னகி இந்தியா ஏற்பாடு செய்துள்ள உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "வெளிப்படையான காரணங்களுக்காக, நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் பன்முகத்தன்மையை சமன் செய்ய முனைகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் குறுகிய மட்டத்தில் இன்று நம்மிடம் உள்ள சிக்கல் அதன் நம்பகத்தன்மைக்கும் அதன் செயல்திறனுக்கும் ஒரு சவாலாக உள்ளது.
50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐ.நா.வில் அங்கம் வகிக்க முடியாத நிலையில் உள்ளன. இது தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள், அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பி5 நாடுகள் ஐ.நா-வில் தேர்தலில் தோல்வியடையத் தொடங்கியுள்ளன. ஐ.நா.-வின் பன்முகத்தன்மையை சீர்திருத்த வேண்டும். உங்கள் தொலைபேசியை தவறாமல் புதுப்பிப்பதுபோல், ஐக்கிய நாடுகள் சபையின் புதுப்பிப்பு பொத்தானை யாராவது அழுத்த வேண்டும்" என்றவர் உலகமயமாக்கலின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
அதில், "இன்று உலகம் அரசியல் ரீதியாக மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. இன்றைய உலக அரசியல் உலகமயமாக்கலின் வெளிப்பாடாகும். பல சமூகங்களில், உலகமயமாக்கல் சமத்துவமின்மையைக் கூர்மையாக்கியுள்ளது, இது வெற்றியாளர்களையும் தோல்வியுற்றவர்களையும் அரசியல் விளைவுகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இது நாடுகளிடையே சமத்துவமற்ற நன்மைகளுக்கும் வழிவகுத்துள்ளது. நாடுகளின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் கூர்மைப்படுத்துவது உலகில் ஒரு வகையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேசிய பாதுகாப்பு குறித்த இந்தியாவின் முன்னோக்கு விரிவடைந்துள்ளது. கோவிட், திடீரென்று சுகாதாரப் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளது. அதேபோல் வர்த்தகம் தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. உலகமயமாக்கல், நமக்குத் தெரிந்தபடி, மிகவும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. ஆனால் இது மிகவும் பரஸ்பர செயல்பாடாகும். எனவே தேசிய பாதுகாப்பு குறித்த நமது உணர்வு இனி நமது எல்லைகளில் இல்லை; அது உங்கள் வீடுகளில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்