விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி திமுக தோழமைக் கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கனிமொழி, முத்தரசன், பாரிவேந்தர், தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மு.க.ஸ்டாலின், “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3h0TeqIவிவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி திமுக தோழமைக் கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கனிமொழி, முத்தரசன், பாரிவேந்தர், தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய மு.க.ஸ்டாலின், “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்