வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “மதுரையை தாண்டிதான் எனது ஊருக்கு போகமுடியும். அதனால் மதுரை நெருக்கமான ஊர் என்பதில் மிகையும் இல்லை. குறையும் இல்லை. தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். எங்கே என்பது பின்னர் அறிவிக்கப்படும். நாத்திகவாதி என்ற பட்டத்தை நான் ஏற்றுக்கொள்வதே கிடையாது. ஏனென்றால் அது ஆத்திகர்கள் கொடுத்த பட்டம். பகுத்தறிவுவாதி என்பதே சரி. பகுத்து அறிந்து புரிந்துகொண்டால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும். தனிமனிதனாக என்னுடைய கருத்துகள், மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை எந்த விதத்திலும் குறைத்துவிடாது.
பகுத்தறிவு என்னுடைய சம்பந்தப்பட்டது. ஆனால் உங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான வாதங்களை முன்வைப்பது என்னுடைய வேலையில்லை. அதற்கு என்னைவிட சிறந்த பலர் குழுவாக இயங்கி கொண்டிருக்கின்றனர். நியாயம் இல்லாமல் இவ்வளவு விவசாயிகள் போராட மாட்டார்கள். எங்களுடைய ஆதரவு எப்போதும் விவசாயிகளுக்கு உண்டு. இங்கு நேர்மைக்கும், நேர்வழிக்கும் பஞ்சம் கிடையாது.
ஊழலை ஒழிக்க வேண்டும். அதை மேல்மட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். கீழ்மட்டத்தில் ஒழித்தால் மட்டும் போதாது. லஞ்சத்தை நம்பி இருக்கக்கூடாது. லட்சியத்தை நம்பி இருக்க வேண்டும். கார்பரேட் கம்பெனிகளே கூடாது என்பது ஒரு மடமைதான். பெருந்தொழில்கள் தேவைதான். ஒரு நகரம் மாநகரமாக மாறும். மதுரை அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான். ஆனால் பெரிய தொழில்கள் இருக்கும் அதேபட்சத்தில் அதைவிட பல மடங்கு சிறு தொழில்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியான விகிதமாக இருக்க முடியும். எம்ஜிஆர் ஒருவர்தான் எம்ஜிஆர். நான் மட்டுமே கமல்ஹாசன்.” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3niZn3Uவரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்