Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''தொடர் மிரட்டல்கள் வருகின்றன'' - பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம். கடந்த சுதந்திரத்தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமிர்தத்தை, ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் தடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளரும் தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்லப்பட்டதையெடுத்து ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம். இந்நிலையில் அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்துள்ளார்.

image

அதில் “ நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஜயகுமாரும், ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

image

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளிடம், இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்க காலஅவகாசம் வேண்டும் என காவல்துறை கூறினர். இதனையடுத்து 2 வார காலாவகாசம் வழங்கிய நீதிபதிகள், அமிர்தம் மனு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/38C8mXP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்