டெல்லியில் பாரதியார் சிலையிலிருந்த கைத்தடி காணாமல் போன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் ஆர்வலர்கள் இணைந்து புதிய கைத்தடியை வைத்தனர்.
தம்முடைய எழுத்துக்களால் புரட்சியை விதைத்த மகாகவி பாரதியாரின் அடையாளங்கள் முண்டாசும், மீசையும் மட்டுமல்ல. கைத்தடியும் அவரது அடையாளங்களில் ஒன்றுதான். அப்படி கைத்தடியுடன் பாரதியார் நிற்பது போன்ற சிலை டெல்லி மகரிஷி மார்க் பகுதியில் கடந்த 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிலையை அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி திறந்துவைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி அதுதான்.
இந்நிலையில் பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டெல்லி மகரிஷி மார்க் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போதுதான் சிலையில் இருந்த கைத்தடி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பாரதியார் சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வர். பாரதியாரின் பிறந்த தினம், நினைவு தினம் ஆகிய நாட்களில் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிலையில் இருந்த கைத்தடி காணாமல் போனதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
கைத்தடி காணாமல் போனது குறித்து உடனடியாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. அதுமட்டுமில்லாமல் சிலை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது குறித்தும் செய்தி வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள சிலைகளை பராமரிக்க கூடிய பணி புதுடெல்லி மாநகராட்சியின் கீழ் வருகிறது. சிலைக்கு பாதுகாப்பு வழங்குவது டெல்லி காவல்துறையின் பணியாக உள்ளது.
இதனையடுத்து பாரதியார் சிலையை முழுமையாக பராமரித்து, திருடுபோன கைத்தடியை மீண்டும் வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே தமிழ் ஆர்வலர்கள் இணைந்து பாரதியார் சிலையில் புதிதாக ஒரு கைத்தடியை வைத்தனர். வரும் காலங்களில் அதனை முறையாக பாதுகாப்பதோடு, சிலையை தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்