வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க பேரணியாக இருந்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளோட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 29-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி இன்று சமர்ப்பிக்க உள்ளார்.
அதற்காக விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தலைமையாக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி காவல்துறையினரின் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nOfrLgவேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க பேரணியாக இருந்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளோட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 29-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி இன்று சமர்ப்பிக்க உள்ளார்.
அதற்காக விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். பேரணி தொடங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தலைமையாக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி காவல்துறையினரின் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்