நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்தவர் தறித்தொழிலாளி துரைசாமி. இவரதுமகன் லோகேஷ். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டதால் எப்போதும் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஆத்தூரில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் 10 லீக் ஆட்டத்தில் விளையாடி 256 ரன்கள் மற்றும் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அதனால் சென்னையில் விளையாட வாய்ப்பு கிடைத்ததுடன் மும்பையில் உலக கிரிக்கெட் அகாடமி அணிக்கும் அவர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இதுபற்றி மாணவன் லோகேஷ் கூறும்போது ‘யார்க்கர்’ நடராஜனை போல் சாதிக்கவேண்டும் என விரும்புவதாக கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்