ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தெரிவித்தார். மேலும் “தமிழகம் முழுவதும் உள்ள லஞ்சத்தின் விலைப்பட்டியல் இங்கே இருக்கிறது. தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தொடர்கிறது. பிறப்புச்சான்றிதழ், இறப்புசான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, இடம் பதிவு, பட்டா பரிவர்த்தணை, சொத்துவரி, மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வாரிசு சான்றிதழ், ஓய்வூதியம், விதவை உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் பெறுகின்றனர். லஞ்சம் இல்லாத் துறைகளை உருவாக்க வேண்டும் ” என்றார்.

அப்போது ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக நாடகமாடுகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “அனுமானத்திற்கு பதில் சொல்ல முடியாது. ரஜினிகாந்தின் உடல்நலத்தில் யூகமான தகவல்களை வெளியிடக்கூடாது. அவரின் உடல் நலம்தான் முக்கியம். ரஜினிகாந்த் உடல்நலம் சரியான பின் கட்சி தொடங்குவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38G12uh

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்