ரஜினியின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என மூத்த பத்திரிகையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடங்குவ நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், “தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் இரண்டு கழகங்களும் வேண்டாம் என்ற ஏக்கம் 1996-ல் இருந்தே இருக்கிறது. அப்போதே ரஜினிகாந்திற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் வாய்ஸ் கொடுத்துவிட்டு விட்டுவிட்டார்.
இரண்டு பெரிய தலைவர்கள் இருந்ததால் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது வெற்றிடம் இருக்கிறது. பெரிய கட்சிகள் மட்டும்தான் இருக்கிறது. தலைவர்கள் இல்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் வருவது ஒரு பொருத்தம். இதுதான் ஏற்ற தருணம். மக்கள் இதை விரும்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கட்சிகளுக்கு மேல் உயர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை. 45 ஆண்டுகளாக தமிழகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆன்மீகம் என்பது வளர்ந்து உள்ளது. ஆன்மீகத்தை விரும்புவர்கள்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர். ரஜினியின் இந்த முடிவு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்களுக்கு தேவையான மதிப்பை கொடுக்காத கட்சி திமுக. அதிமுகவும் திமுகவும் அண்மையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் தலைவர்களால் அல்ல. கட்சியின் வலிமையால்தான்.
ஆன்மீகத்தை மட்டும் வைத்து வாக்கு அளிக்கமாட்டார்கள். எழுச்சி எழும்போது அமைப்பு இல்லாத ஓர் இயக்கம்கூட ஆட்சிக்கு வரும். பல பேருடைய கருத்துக்களை ரஜினி கேட்டிருக்கிறார். என்னுடைய கருத்தையும் கேட்டார். ஆனால் முடிவு அவருடையதுதான். என்னால் அவர் முடிவு எடுத்தார் என்பது தவறு. ரஜினியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வோர் அவருடன் பயணிக்க முடியும். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. யார் அவருடைய கொள்கையை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.” எனத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி > ஜனவரியில் கட்சி தொடக்கம் : ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3luWzyZரஜினியின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என மூத்த பத்திரிகையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்