Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தபால் வாக்கு: தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்க்கும் தமிழக எதிர்க்கட்சிகள்!

https://ift.tt/36vmoeb

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கும் வசதிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியது. அதில் முக்கியமானது, 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை அளிக்கலாம் என்பது. ஆனால் இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைதான் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை மாற்றி அமைத்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியுள்ளார், நேரிலும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புதிய நடைமுறையின்படி, பூத் லெவல் அதிகாரி அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்குச் செல்வார். வாக்காளர்களிடம் தபால் வாக்குச் சீட்டைக் கொடுத்து, வாக்குகளைப் பதியப் பெற்று வாங்கி வந்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்.

image

ஒருவேளை பூத் லெவல் அதிகாரி போகும்போது அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஐந்து நாட்களுக்குள் அந்த வீட்டிற்குச் சென்று, தபால் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். இப்படிச் சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் குறித்த விவரங்கள், முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தப்படமாட்டாது. அதனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

image

தமிழகத்தில் இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றினால் 13 லட்சத்து 75 ஆயிரத்து 198 பேருக்கு தபால் வாக்குகள் அளிக்க வாய்ப்பு கிடைக்கும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக சென்னையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் உள்ளனர். அடுத்ததாக கோவையில் 68 ஆயிரம் பேரும், திருப்பூரில் 66 ஆயிரம் பேரும் இருப்பதாக தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தபால் மூலம் வாக்களிப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்