Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு புதிய நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. அதில் முக்கியமானது 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்பதே. 80 வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கருதியும், வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அதே நடைமுறையை தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, பூத் லெவல் அதிகாரி அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்குச் செல்வார். வாக்காளர்களிடம் தபால் வாக்குச் சீட்டைக் கொடுத்து, வாக்குகளைப் பதியப்பெற்று வாங்கிவந்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார். ஒருவேளை பூத் லெவல் அதிகாரி போகும்போது அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஐந்து நாட்களுக்குள் அந்த வீட்டிற்குச்சென்று, தபால் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். இப்படிச் சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் குறித்த விவரங்கள், முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தப்பட மாட்டாது.

image

தமிழகத்தில் இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற உள்ள நிலையில் 13 லட்சத்து 75 ஆயிரத்து 198 பேருக்கு தபால் வாக்குகள் அளிக்க வாய்ப்பு கிடைக்கும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை பொருத்தவரை, அதிகபட்சமாக சென்னையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் உள்ளனர். அடுத்ததாக கோவையில் 68 ஆயிரம் பேரும், திருப்பூரில் 66 ஆயிரம் பேரும் இருப்பதாக தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தபால் மூலம் வாக்களிப்பது நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையை எதிர்த்து ஊனமுற்றோர் உரிமைகளுக்காக போராடும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் தலைவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டி.எம்.என் தீபக்(40) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2M5fnZX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்