Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பொங்கல் பரிசு டோக்கன்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மறுப்பு

'பொங்கல் பரிசுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்புகிறார்' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வலியுறுத்தினார். அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசுபோல காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

image

இந்நிலையில் பொங்கல் பரிசுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்புகிறார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடவே 2,500 ரூபாய் வழங்கப்படுவதாகவும் முதல்வர் விளக்கம் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2Jue6KU

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்