சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நிலை பேட்ஸ்மேன்தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். உள்நாடு, அயல்நாடு என அவரை அடிச்சு தூக்கும் பவுலர்களே இல்லை. வேகப்பந்து வீச்சானாலும், சுழற்பந்து வீச்சானாலும் சரி கூலாக ஹேண்டில் செய்வார்.
அண்மையில் ஐசிசி கூட கடந்த பத்து ஆண்டு கால சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித்தைதான் தேர்வு செய்தது. இருப்பினும் இப்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடி வருகிறார் அவர். இந்தத் தொடரின் 4 இன்னிங்ஸில் விளையாடிய ஸ்மித் வெறும் 10 ரன்களை தான் குவித்துள்ளார். அதில் இரண்டு முறை அஷ்வினின் வேகத்தில் விக்கெட்டை இழந்துள்ளார். இந்நிலையில்தான் எனது கெரியரில் அஷ்வினை தவிர எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் அப்படிச் செய்ததில்லை என தெரிவித்துள்ளார் ஸ்மித்.
“எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் நடந்ததோ வேறு. எனது கெரியரில் அஷ்வினை தவிர எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் அப்படிச் செய்ததில்லை. வழக்கமாக நான் சுழற்பந்து வீச்சை ஆக்ரோஷமாக கையாளுவேன். ஆனால் அஷ்வினிடம் என்னால் அதை செய்ய முடியவில்லை. இது இரண்டு முனைகள் கொண்ட வாளைப் போல இருக்கிறது. இருப்பினும் களத்தில் நிலைத்து நின்று என்னால் விளையாட முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு தெரிந்து இந்த ஆண்டு ஒரு ஆட்டத்தில் 64 பந்துகளை நான் சந்தித்ததுதான் அதிகபட்சம் என கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.
“ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது ஸ்மித்தைதான் முதலில் அவுட் செய்ய வேண்டும். அவர் தான் அந்த அணியின் பேட்டிங் அஸ்திவாரம். அதை செய்ய எங்களிடம் திட்டமிருந்தது. அதன்படி இயங்கினோம்” என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்