கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி, 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில்தான் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார்.
தமிழ் மீது தீராத காதல் கொண்ட பாரதி, எழுத்துகள் மூலம் தேச உணர்வை ஊட்டியவர். சாதி விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்தார். பெண்கள் விடுதலைக்காவும் பாடுபட்டார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் வரிகள் தீண்டாமை ஒழிப்புக்கு இன்றும் முன்னுதாரணம். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று முழங்கிய பாரதி, வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் பட்டாம்பூச்சியாக பறக்க வழிக்காட்டினார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி என பல்வேறு மொழிகளின் காவலனாக பாரதி திகழ்ந்திருந்தாலும், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றுக்கூறி தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கு உயர்த்திக் காட்டினார்.
இன்றும் முடங்கிக் கிடக்கும் ஒருவனை வீரரான மாற்றிவிடுகிறது பாரதியின் வரிகள்.. அதில்ஒன்றுதான்
“தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?”
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,இமைப்பொழுதும் சோராது இருத்தல்” இதுவேதான் பாதியாரின் கடைசி வரை எண்ணமாக இருந்தது. இன்றும் பாரதியின் வரிகள், எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை ஒளிவிளக்காக சுடர்விடச் செய்கிறது. சமூக சீர்திருத்தத்திற்காக, விடுதலைக்காக போராடிய பாரதியாரை அவரது பிறந்தநாளில் ஒவ்வொரு மனிதரும் நினைவுகூர்வது நிச்சயம் அவசியமான ஒன்று.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்