“அப்போது 'கோ கொரோனா' என கோஷமிட்டேன்; கொரோனா போய்விட்டது. இப்போது நோ கொரோனா என்று சொல்லுங்கள்” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராகவும் இருந்து வருகிறார் ராம்தாஸ் அத்வாலே. மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் வசித்து வரும் இவர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரசுக்கு எதிராக 'கோ கொரோனா' என்ற முழக்கத்தை கூறி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில், உருமாறிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து பேசியுள்ளார் ராம்தாஸ் அத்வாலே.
“அப்போது ‘கோ கொரோனா; கொரோனா கோ’ என்றேன். கொரோனா போய்விட்டது. தற்போது புதிய கொரோனா வைரஸ் வந்துள்ளது. அதனால் 'நோ கொரோனா! கொரோனா நோ’ என கோஷமிடுங்கள்” என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். இதனிடையே ’கொரோனா கோ’ என்று இவர் கூறிய சில நாட்களிலேயே அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்