விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தக்கட்ட நகர்வாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19-ஆவது நாளை எட்டியுள்ளது. ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிந்து வரும் நிலையில் டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்கின்றனர். நாடெங்கும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதற்கிடையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சில விவசாய அமைப்புகள் மட்டும் போராட்டத்திலிருந்து பின் வாங்கியுள்ளன. அரசுடன் இணைந்து போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய இந்த அமைப்புகள் முயற்சிப்பதாக பிற அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாக்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரைவில் தேதி குறிக்கப்படும் என்றும் இ்ப்பிரச்னையில் சுமுக தீர்வு எட்டப்படும் என்றும் மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவியுள்ள சில தேசத் விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். இச்சூழலில் டெல்லியை ஒட்டிய உத்தரப்பிரதேச எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை விவசாய அமைப்பினர் திருப்பி அனுப்பினர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/381naz1விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தக்கட்ட நகர்வாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19-ஆவது நாளை எட்டியுள்ளது. ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிந்து வரும் நிலையில் டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்கின்றனர். நாடெங்கும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதற்கிடையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சில விவசாய அமைப்புகள் மட்டும் போராட்டத்திலிருந்து பின் வாங்கியுள்ளன. அரசுடன் இணைந்து போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய இந்த அமைப்புகள் முயற்சிப்பதாக பிற அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜாக்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரைவில் தேதி குறிக்கப்படும் என்றும் இ்ப்பிரச்னையில் சுமுக தீர்வு எட்டப்படும் என்றும் மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவியுள்ள சில தேசத் விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். இச்சூழலில் டெல்லியை ஒட்டிய உத்தரப்பிரதேச எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை விவசாய அமைப்பினர் திருப்பி அனுப்பினர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்