Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜியோ மொபைல் டவர்களின் மின் இணைப்புகளை துண்டித்த விவசாயிகள் - பாஞ்சாப்பில் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி இருந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் இயங்க தேவைப்படும் மின்சாரத்தை துண்டித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் விவசாயிகள். 

image

அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்றாக இணைந்து மோகா, பாட்டியாலா, நவன்ஷஹர், ஃபெரோஸ்பூர், மான்சா, பர்னாலா, பாசில்கா மாதிரியான மாவட்டங்களில் உள்ள ஜியோ டவர்களுக்கான மின் இணைப்பை கடந்த சில நாட்களாக துண்டித்து வருகின்றனர். 

“எங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக இதை செய்துள்ளோம். எங்களது போராட்டம் கார்ப்பரேட்களை எதிர்த்து தான். அதனால்தான் இதை செய்துள்ளோம். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த புதிய சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கு ஆதாயம்  கொடுக்கிறது. எங்களது போராட்டத்திற்கு செவி சாய்க்காத அரசின் காதுகளை எட்டும் வரை இந்த போராட்டம் தொடரும்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் மின் இணைப்பை துண்டித்த விவசாயிகள் அந்த டவரின் கேட்டையும் பூட்டி வைத்துள்ளனர்.  

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3hlzXk3

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்